Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புளியந்தோப்பில் மீன் வெட்டும் தொழிலாளி யை வெட்டிய மூன்று பேர் கைது!

#image_title

புளியந்தோப்பில் மீன் வெட்டும் தொழிலாளி யை வெட்டிய மூன்று பேர் கைது

சென்னை, புளியந்தோப்பு, திரு.வி.க நகர் 1வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் குமார் வயது 25. இவர் மேற் கண்ட முகவரியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். காவாங்கரை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் புளியந்தோப்பு அம்பேத்கார் நகர் 1வது தெரு வழியாக தனது மனைவியுடன் வீட்டி ற்கு சென்று கொண்டிருந் தார். அப்போது எதிரே வந்த மூன்று பேர் ராஜ்குமாரின் மனைவியை இடித்துள்ள னர்.

இதனை தட்டிக் கேட்ட ராஜ் குமாரை சரமாரியாக தாக்கி கத்தியால் முகத்தில் வெட்டினர். மேலும் அருகில் இருந்த பீர்பாட்டிலை எடு த்து அவரது மனைவியை யும் தாக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடை ந்த அவர்கள் அக்கம் பக்கத் தினர் உதவியுடன அருகில் உள்ள தனியார் மருத்துவம னைக்கு சென்றனர். அங்கு ராஜ்குமாருக்கு முகத்தில் நான்கு தையல்கள் போட்டு இது குறித்துபுளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற் கொண்டதில் புளியந் தோப்பு பகுதியை சேர்ந்த நரம்பு சஞ்சய் வயது 19, அதே பகுதியைச் சேர்ந்த கடா சஞ்சய் வயது 20 மற் றும் அப்பு என்கிற அபூர் வன் வயது 21 ஆகியமூன்று பேர் இந்த செயலில் ஈடுபட் டது தெரிய வந்தது.

இதனை அடுத்து நேற்று காலை ஆடுதொட்டி பகுதி யில் பதுங்கி இருந்தமூன்று பேரையும் புளியந்தோப்பு போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version