Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது!

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியில் தண்ணிப் பாம்பை வாயால் கடித்து துப்பிய சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சின்ன கைனுர் சேர்ந்த மோகன் (33) சூர்யா (21) சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேரை கைது செய்து ராணிப்பேட்டை ஆற்காடு வனச்சரக அலுவலர் சரவண பாபு நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாம்பை வாயால் கடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவத்தில் அரக்கோணம் பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version