Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் மூன்று ரபேல் விமானங்கள் இந்தியா வருகை!

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் விமானங்கள் 56 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தியாவிற்கு கொண்டு  வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே 5 விமானங்கள் இந்தியாவிற்கு வந்து விட்டது தற்போது மீண்டும் 3 ரபேல் விமானங்கள் நாளை இந்தியாவிற்கு வர தயாராக உள்ளது. பிரான்ஸ் நாட்டில் இஸ்ட்ரஸ் என்கின்ற விமான தளத்தில் இருந்து இந்த ரபேல் விமானங்கள் புறப்பட தயாராக உள்ளது. 

இந்த ரபேல் விமானங்கள்  வழியில் எங்குமே நிறுத்தாமல் அங்கிருந்து புறப்பட்டு நேரடியாக இந்தியாவில் உள்ள அம்பாலா விமான தளத்தில் தரை இறங்க உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. 

பிரான்சில் இருந்து புறப்படும் இந்த விமானத்திற்கு நடுவானிலேயே இதற்கு தேவையான எரிபொருளை நிரப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். அதற்காக அந்த நாட்டிலிருந்து வேறு ஒரு துணை விமானமும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version