துளசியின் தூய மருத்துவ குணங்கள்..!!!

0
222
Thulasi Benefits in tamil

துளசியின் தூய மருத்துவ குணங்கள்..!!!

இயற்கை நமக்கு கொடுத்த அற்புத மருத்துவ வரங்களில் துளசியும் ஒன்று. பெரும்பாலும் கோயிலில் துளசி தீர்த்தம் கொடுப்பதற்கு மூல காரணமே ஆரோக்கியம்தான். துளசியில் இருக்கும் மருத்துவ பயன்களின்(holy basil benefits in tamil) மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்று நிரூப்பிக்கப்பட்டுள்ளது.  துளசியால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்வோம்.

துளசியால் ஏற்படும் நன்மைகள் :Thulasi Benefits in tamil

* துளசியை பச்சையாக உண்டு வந்தால் இருமல் மற்றும் தொண்டையில் ஏற்படும் நோய்களை விரட்டலாம்.

* சிறிதளவு தண்ணீரில் துளசியை 1 மணி நேரம் ஊர வைத்து, அந்த தண்ணீரை பருகி வந்தால் நீரிழிவு நோய் வருவதை தடுக்கலாம்.

* துளசி இலையை காயவைத்து பொடியாக்கி சொரி, படை இருக்கும் இடத்தில் தடவினால் தோல்வியாதிகள் குணமாகும்.

* ஆஸ்துமா, மன அழுத்தம், இரத்த ஓட்டம், ஞாபகசக்தி இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு துளசி தீர்த்தம் நல்ல தீர்வைத் தருகிறது.

* துளசியை கசாயம் செய்து குடித்தால் தீராத சளியும் தீர்ந்து போகும். குளிக்கும் தண்ணீரில் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு துளசியை போட்டுவிடுங்கள், துர்நாற்றத்தை தடுத்து சருமத்தில் பாதுகாப்பை உண்டாக்கும்.

* காய்ச்சல் ஏற்படும் நேரத்தில் மாத்திரையை தேடி ஓட வேண்டாம். நான்கு துளசி இலையை மென்று விழுங்கினால், காய்ச்சல் குறையும் அல்லது குணமாகும்.

* கண் எரிச்சல், வாய்ப்புண், தலைவலி போன்ற சிறு வியாதிகளுக்கு துளசி நல்ல நிவாரணியாக உள்ளது.

* காலையில் வெறும் வயிற்றில் துளசியை உண்ணுங்கள். இதயம் மற்றும் சுவாசத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது.

குறிப்பு :  துளசியை உண்பதற்கு முன் சுத்தமான தண்ணீரில் இலைகளை கழுவிவிட்டு உண்ணவும்.