இவ்வாறு  வாகனங்கள் வாங்குவதில் புதிய நடைமுறை அறிமுகம்! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

0
231
Thus introducing a new practice in buying vehicles! Information published by the Ministry of Transport and Highways!

இவ்வாறு  வாகனங்கள் வாங்குவதில் புதிய நடைமுறை அறிமுகம்! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இந்தியாவில் மறு விற்பனைக்கான கார் சந்தை நல்ல வளர்ச்சி நோக்கி செல்லும் நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வருகை கூடுதல் சலுகையை நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றது.அதனையடுத்து பதிவு செய்யப்பட்ட கார்களை வியாபாரிகள் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல்,வணிகம் செய்வதை எளிதாக்குதல் வெளிப்படை தன்மை போன்ற காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட கார்களை வாங்க புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

அதன்படி வியாபாரிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்படுகின்றது.அதன் பிறகு வியாபாரிகள் தங்களிடம் உள்ள மோட்டார் வாகனங்களின் பதிவு சான்றிதழை புதுப்பித்தல் அல்லது தகுதி சான்றிதழை புதிப்பித்தல்,நகல் பதிவு சான்றிதழ் தடையின்மை சான்றிதழில் உரிமையை மாற்றுதல் போன்றவைகளுக்கு விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்னணு பயண வாகன பதிவேட்டை பராமரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயண தூரம்,பயணத்தின் நோக்கம், ஓட்டுனர் மற்றும் நேரம் போன்ற விவரங்களை கொண்டுள்ளது போல நடைமுறைப்படுதப்பட்டுள்ளது.இந்தியாவில் பழைய கார்களை விற்பனை செய்யும் சந்தை படிப்படியாக முன்னேறி வரும் நிலையில் அண்மை காலமாக பழைய வாகனங்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களின் எண்ணிகையும் சற்று உயர்ந்து வருகின்றது.மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மூலம் பழைய கார் விற்பனையில் நடைபெறும் மோசடிகளை தடுக்க முடியும் என எதிர்பார்க்கபடுகிறது.