மழைக்காலம் வந்து விட்டது.. சளி இருமலா? அப்போ இந்த ரசம் சாப்பிடுங்கள்..!

0
134

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் , மூக்கடைப்பு,சைனஸ் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்திற்கும் தூதுவளை சிறந்த பலனை தரும். தூதுவளையில் துவையல், சூப் , ரசம் போன்றவை செய்து உணவில் சேர்த்து கொள்ளலாம். தற்போது சுவையான தூதுவளை ரசம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை :

தூதுவளை கீரை – 1கப்

பூண்டு – 6 பல்

தக்காளி – 3

மஞ்சள் தூள் – 1/4 tsp

மிளகு – 1tbsp

சீரகம் – 1 tbsp

நெய் – 2 tsp

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

சின்ன வெங்காயம் – 6

புளி – எலுமிச்சை அளவு

காய்ந்த மிளகாய் – 2

பெருங்காயத்தூள் – 1/2 tsp

கடுகு – 1/2 tsp

செய்முறை :

தூதுவளையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அடுப்பில், கடாயை வைத்து நெய் விடுங்கள் அது உருகியதும் தூதுவளையை வதக்கி கொள்ளுங்கள். அதனை மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

தண்ணீர் கொதிக்கும் போது புளி கரைசல், அரைத்த தக்காளி சேர்த்து கொள்ளுங்கள்.அதனுடன் மஞ்சள் தூள், பூண்டி (இடித்து) சின்னவெங்காயம், ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

கொதிக்கும் போது அரைத்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து கொள்ளவும். நன்றாக கொதித்ததும் இறக்கி கொள்ளுங்கள். அடுப்பில் சிறிய கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய்,பெருங்காடம் சேர்த்து தாளித்து கொதித்த ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.