Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Thyroid Problem? உங்களுக்கு தைராய்டு இருந்தால் இந்த உணவுகளை தொட்டு கூட பார்த்துடாதீங்க!!

Thyroid Problem? If you have thyroid then don't even touch these foods!!

Thyroid Problem? If you have thyroid then don't even touch these foods!! Thyroid Problem? If you have thyroid then don't even touch these foods!!

நமது கழுத்தின் முன் பகுதியில் இருக்கின்ற நாளமில்லா சுரப்பியை தான் தைராய்டு என்கின்றோம்.இந்த தைராய்டு சுரப்பியில் பிரச்சனை ஏற்பட்டால் உடல் இயக்கம் முழுமையாக பாதிப்படைந்து விடும்.

இன்று பெரும்பாலானவர்கள் தைராய்டு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு இந்த தைராய்டு பாதிப்பு எளிதில் ஏற்பட்டுவிடும்.தைராய்டு இருந்தால் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை சந்திக்க கூடும்.இன்றைய காலத்தில் பெண்களை பாதிக்கும் உடல்நலப் பிரச்சனைகளில் முதலிடத்தில் இருப்பது தைராய்டு.உடல் பருமன்,மோசமான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.

புரதம்,கொழுப்பு,கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது.

தைராய்டு அறிகுறிகள்:

1)முடி உதிர்தல்
2)இளநரை
3)தோல் சவறட்சி
4)முகம் வீக்கம்
5)மலச்சிக்கல்
6)ஞாபக மறதி
7)உடல் சோர்வு
8)மூட்டுவலி

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.அதனோடு நீர்ச்சத்து நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகள்:

*பசலைக்கீரை
*முள்ளங்கி
*காலிஃபிளவர்
*முட்டைக்கோஸ்
*டர்னிப்
*கோதுமை
*பார்லி
*உப்பு நிறைந்த உணவுகள்
*எண்ணையில் பொரித்த,வறுத்த உணவுகள்

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:

*தேங்காய் எண்ணெயில் சமைத்த உணவுகள்
*இஞ்சி சேர்க்கப்பட்ட உணவுகள்
*ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்கப்பட்ட பானம்
*வைட்டமின் பி நிறைந்த உணவுகள்
*வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
*பருப்பு வகைகள்
*பால் பொருட்கள்

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை மேல் குறிப்பிட்டுள்ளபடி மாற்றிக் கொண்டால் உரிய பலன் கிடைக்கும்.

Exit mobile version