திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!

0
171

திக்..திக்.. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட கோர விபத்து!!.. பகிர் காட்சிகள்!!

 

 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் இயங்கி வரும் சுங்கச்சாவடி மையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கடலோர பகுதியான ஷிரூரில் மழை அதிக அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாலை நான்கு மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று சுங்கச்சாவடியை கடக்க வந்துள்ளது.

 

 

அதனை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக அகற்றிக் கொண்டுள்ளார். ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தான் இதனைச் செய்துள்ளனர். இங்கு மூன்று தடுப்பு கட்டைகள் இருந்தது அதில் 2 அகற்றப்பட்டது. மீதமுள்ள ஒன்றை அகற்றும் போது ஆம்புலன்ஸ் மிக அதிக வேகத்துடன் கோர விபத்து ஏற்படுத்தியது.

 

விடாமலையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீர் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனத்தின் டையருக்கும் சாலைக்குமான ஈர்ப்பு பிடிமானம் தளர்ந்தது. அதனால் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியிலிருந்த கேபின் ஒன்றில் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸ்சின்  உள்ளிருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர்.

 

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் பயணித்த நோயாளி அவருடன் இருந்த இரண்டு நபர் மற்றும் ஓட்டுநர் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வீடியோவை மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகின்றது. பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.