உலக நாடுகளில் டிக்டாக் சேவையை தன்வசப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செய்ற வேலையைப் பாருங்க!!!

0
122

இந்திய பாதுகாப்பிற்காக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை அண்மையில் இந்தியா தடை செய்தது. அதேபோன்று பிற நாடுகளும்  டிக் டாக்கை தடை செய்ய விரும்புவதற்கு முன்னாலே அந்த செயலியின் சேவையை கையகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நானெள்ளாடிக் டாக் செயலி சேவையை விலைக்கு வாங்குவது குறித்து நடத்திய தொலைபேசி உரையாடலின் தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டிக் டாக் செயலி யால்  அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்காது என்ற உறுதியை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 

அதாவது டிக் டாக் செயலியின் தாய் நிறுவனமான சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ்  நிறுவனத்திடமிருந்து டிக் டாக் சேவையை மைக்ரோசாப்ட் வாங்க திட்டமிட்டுள்ளது.

எனவே அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் டிக்டாக் சேவையை மைக்ரோசாஃப்ட்  செயல்படுத்துவது குறித்த அறிக்கையை மைக்ரோசாஃப்ட், பைட்டான்ஸ் ஆகியவை வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்த சந்தைகளில் டிக் டாக் சேவையின் செயல்பாடு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சொந்தமாக இருக்கும். இவ்வாறு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் டிக்டாக் சேவையை கையகப்படுத்த மைக்ரோசாப்ட் திட்டம் தீட்டி வருகிறது.