Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!

#image_title

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!

நேபாளம் நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறி டிக்டாக் செயலிக்கு அந்நாட்டு அரசு தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு நேபாளம் நாட்டில் டிக்டாக் செயலி பயன்படுத்துவோர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனா நாட்டை தலைமையிடமாக கொண்ட பைட் டான்ஸ் என்ற நிறுவனம் இந்த டிக்டாக் என்ற செயலியை உருவாக்கியது. இந்த டிக்டாக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் உலக மக்கள் பலரும் பயன்படுத்தும் முக்கிய சமூகவலைதளச் செயலியாக விளங்குகின்றது.

இந்த டிக்டாக் செயலியை பயன்படுத்தி மக்கள் அனைவரும் உலக அளவில் பிரபலமானவராக மாறுகின்றனர். இருப்பினும் இந்த டிக்டாக் செயலி மூலமாக நாட்டுக்கும் தனிப்பட்ட தரவுகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்பட பல நாடுகள் தடை விதித்து உள்ளது. இந்நிலையில் அந்த நாடுகளை தொடர்ந்து அண்டை நாடாக இருக்கும் நேபாளமும் டிக்டாக் செயலுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த சில காலமாக பல்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் டிக்டாக் செயலி மூலமாக மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை உருவாக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் என்று குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றது. இந்த செயலி மூலமாக சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயல்கள் அதிகரித்து வருகின்றது என்பதை நேபாளம் நாட்டு அரசு கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக நேபாளம் நாட்டு பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா அவர்களின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கட்டிக் செயலிக்கு தடை விதிப்பதாக ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செய்தி தொடர்பாளர் ரேகா சர்மா அவர்கள் “டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இருப்பினும் எப்பொழுது டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை” என்று கூறினார்.

Exit mobile version