Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவால் மனித இனம் அழியுதோ இல்லையோ டிக்டாக் நிச்சயம் அழிய போகுது!

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தொற்று காட்டுத்தீ போல் பரவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வர வேண்டாம் என்று பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

சீனாவில் கொரோனா பரவ தொடங்கினாலும் அங்கு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது, ஆனால் இந்த வைரஸ் தொற்று தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நாடுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தாலும் மக்களை கட்டுப்படுத்த முடியாததால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா அதிபர் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறி கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் சீன அரசு தவறான புள்ளி விவரங்களை தருவதாகும், அங்கு உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டிருக்கும் என்று என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சீன தயாரிப்பான டிக்டாக் செயலி பயனாளர்களின் ரகசியங்களை திருடுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி சீனா பல்வேறு அமெரிக்கர்களின் ரகசியங்களை சேமித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

டிக்டாக் செயலிக்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி வருவதால் அதனை தடை செய்ய வேண்டும் என்று ஆசிய நாடுகளில் எதிர்ப்புகள் எழுந்து வந்தது. ஏற்கனவே கொரோனாவால் பல நாட்டினர் சீனா மீது கோபத்தில் இருக்கின்றனர், மேலும் எதிர்ப்புகள் வலுப்பதால் இந்தியா உட்பட பல நாடுகளில் டிக்டாக் செயலி தடைசெய்ய சொல்லி டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதனால் டிக் டாக் செயலியை அமெரிக்கா, இந்தியா போன்ற பல நாடுகளில் தடை செய்ய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Exit mobile version