Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிக்கும் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து!!

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிக்கும் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்து!!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் தமிழ் டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து நடிக்கவுள்ளார்.

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான நடிகை சன்னி லியோன் தமிழ் சினிமாவில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பிறகு தமிழ் படங்களில் எதிலும் கமிட் ஆகாமல் இருந்த சன்னி லியோன் தற்போது மீண்டும் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சன்னி லியோன் நடிக்கும் திரைப்படத்தில் யுவன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் தமிழ் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்துவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும், இந்த படத்திற்கு ஜாவிட் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Exit mobile version