Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிக்-டாக் செய்வதற்காக தண்ணீரில் குதித்த இளைஞர் திரும்பி வரவேயில்லை! பரிதாபமான வீடியோ!! ராமதாஸ் எச்சரித்த காரணம்?

டிக்-டாக் செய்வதற்காக தண்ணீரில் குதித்த இளைஞர் திரும்பி வரவேயில்லை! பரிதாபமான வீடியோ!! ராமதாஸ் எச்சரித்த காரணம்?

உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞர் டிக்டாக் செய்வதில் மிகவும் ஆர்வமானவர். தினமும் வித்தியாசமான வீடியோக்களை பதிவேற்றி மகிழ்ச்சியடைந்த ராஜா, புதிதாக வீடியோ எடுக்க திட்டமிட்டார்.

நண்பர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கங்கா கால்வாயில் ராஜா குளிக்க சென்றார். அங்கு வழக்கம்போல ஏதாவது வீடியோ எடுக்கலாம் என்று நினைத்து, கால்வாயின் மேற்பகுதியில் இருந்து குதிக்க தயாரானார்.

இதை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்தனர். சில நொடிகளுக்கு பிறகு தலைகீழாக ராஜா குதித்தபோது அவரது தலை தண்ணீருக்கு அடியில் இருந்த பாறையில் மோதி, அங்கேயே உயிரிழந்தார். அவரது உடல்தண்ணீரில் மிதப்பதை பார்த்துவிட்டு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். அற்ப சாகசத்திற்காக ஒரு உயிர் பிரிந்துவிட்டது.

https://youtu.be/30w8ERDAyZs

சமீபத்தில் மதுரையில் கணவன் மிலிட்டரியில் இருப்பதால் வேறொரு நபருடன் சேட்டை செய்து டிக்டாக்கில் வெளியிட்ட பெண்ணை ஊரைவிட்டே பொதுமக்கள் வெளியேற்றிய சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது கருத்தினை எவரும் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு, ஒரு இளைஞனின் உயிரையே பறித்துவிட்டது. டிக்டாக்கினால் மேலும் இதுபோன்ற கோரமான சம்பவங்கள் நடந்தாலும் அதை யாராலும் தடுக்கமுடியாத  சூழலில் இருக்கிறோம். இந்தியாவில் டிக்டாக்கை தடை செய்தால் பல்வேறு அசம்பாவிதங்களை தடுக்கலாம்.

Exit mobile version