Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம்:? உயர் நீதிமன்றம் அதிரடி!

டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம்:? உயர் நீதிமன்றம் அதிரடி!

கடந்த வருடம் 2019-ம் ஆண்டு திருச்செந்தூர் ராம்குமார், மதுரை ரமேஷ் ஆகியோர்கள் டாஸ்மார்க் கடை தொடர்பான தொடரப்பட்ட பொதுநல வழக்கினை,மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதிகள்,ஆர். மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாந்த் உள்ளிட்டோரின் அமர்வு கொண்ட குழு நேற்று விசாரித்தது.

அவர்கள் கொடுத்த பொதுவுநல மனுவில்,மதுவின் தீமைகள் தொடர்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்,சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு மதுவை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்,விலைப்பட்டியலை தமிழில் வைக்க வேண்டும்,மற்றும் 21வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே மது அருந்தும் வகையில் உரிமை வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்,மற்றும் பொதுமக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளின் நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும்,போன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதிகள்,மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளின் நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரைமாற்றி அமைப்பது குறித்த ஆலோசிக்கப்பட்டது.மேலும் நேரத்தை மாற்றி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தமிழகரசிடம் ஆலோசித்து இந்த மாதம் 27ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டுமென்று மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
மேலும் டாஸ்மாக் கடைகளில் நேரங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றி அமைக்கப்படுமா என்ற கேள்வி மக்களின் மனதில் எழுந்துள்ளது.

Exit mobile version