Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆஸ்திரேலியாவில் நீடிக்கபோகும் நெருக்கடிநிலைக்கான கால வரம்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கம், நெருக்கடிநிலைக்கான கால வரம்பை நீட்டிக்க, அதன் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளது. தற்போது அங்கு 6 மாதங்களுக்கு மட்டுமே நெருக்கடிநிலையை அமல்படுத்த இயலும். கால வரம்பை 18 மாதங்கள் வரை நீட்டிக்க விக்டோரியா மாநில அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். புதிய சட்டங்களால், நெருக்கடிநிலை முடிந்த பின்னரும், கடுமையான பொதுச் சுகாதார நெறிமுறைகளை அமலாக்க முடியும். ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இன்று கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கிடையே கூடவுள்ளது. முதல்முறையாக, உறுப்பினர்கள் சிலர் காணொளி வழியாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

Exit mobile version