அடேங்கப்பா..டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்க ! வீட்டு மருத்துவம்! இது தெரியாம போச்சே!
டெங்கு எனும் வைரஸால் டெங்கு காய்ச்சல் வருகிறது. ‘ஏடீஸ் எஜிப்டை’ (Aedes Aegypti) எனும் கொசுக்கள் இதைப் பரப்புகின்றன. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் ஏடீஸ் வகைப் பெண் கொசுக்கள், அந்தக் கிருமியை அடுத்தவரின் உடலுக்குள் செலுத்துகின்றன. அதன் மூலம் அடுத்தவருக்கும் டெங்கு பரவுகிறது.
உலக அளவில் ஆண்டுதோறும் 5 கோடிப் பேரை இது பாதிக்கிறது.டெங்குவுக்கு எதிரான போரில் கொசுக்களை ஒழிப்பதுதான் முக்கிய நோக்கம். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஆங்கில மருந்துக் இணையான வீட்டு மருந்து முக்கியம் அவசியம். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேலும் குறையாமல் இருப்பதால் மருத்துவமனைக்கு சென்று டெங்கு பரிசோதனை செய்ய வேண்டும்.
பப்பாளி இலைச்சாறு:
பப்பாளி இலைச்சாறு அல்லது பப்பாளி இலை விழுது ஆகிய இரண்டும் டெங்குவால் இழந்த இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
துளசி சாறு:
துளசி சாறு அல்லது இலையை ஆகிய இரண்டும் தினந்தோறும்த எடுத்துக் கொள்ளலாம்.
நிலவேம்பு:
நிலவேம்பு கசாயம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மேலும் வீரியமிக்க மருந்தாகும்.
மஞ்சள் சேர்த்த பால்:
காய்ச்சல் பரவும் காலங்களில் பாலில் சிட்டிகை மஞ்சள் மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடிக்க வேண்டும். நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் வல்லமை மஞ்சளுக்கு உண்டு.
பழச்சாறு :
காய்ச்சல் நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் சோர்வை விரட்டி அடிக்க மருத்துவ ஆலோசனையுடன் பழச்சாறை எடுத்துக்கொள்ளலாம்.
சுத்தம் பேணுங்கள்:
வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப டெங்கு கொசு சேராமல் இருக்க வீட்டையும் சுற்றி இருக்கும் இடங்களையும் சுத்தமாக வைத்திருங்கள் வேண்டும்.