வாய் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த டிப்ஸ் பயன்படுத்துங்கள்
வாயில் நாற்றம் என்றால் வயிற்றில் கோளாறும்,வயிற்றில் புண் இருப்பதாக அர்த்தம்.இதனை சரி செய்ய சில வழிமுறைகளை பார்க்கலாம்.
1.வேப்பிலை காயை காயப்போட்டு காய்ந்ததும் அதனை பொடி செய்து தண்ணீரில் கரைத்து காலை மற்றும் இரவு இரு நேரமும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
2.தேங்காய் பாலில் மாசிக்காயை அரைத்து உட்கொண்டு வந்தால் வாய்ப்புண்,தொண்டைப்புண் குணமாகும்.
3.அகத்திக் கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் குணமாகும்.அத்துடன் இரத்த கொதிப்பும் கட்டுப்படுத்தும்.
4.தயிராக எடுத்துக்கொள்ளாமல் மோராக அதிகம் குடித்து வர வயிற்று புண் குணமாகி வாய் துர்நாற்றம் அடிக்காது.
5.ஒரு கப் தண்ணீரை நன்கு சூடுபடுத்தி எடுத்துக்கொள்ள வேண்டும்.அதன்பின் அதில் நான்கு கிராம்பு மற்றும் சிறதலுவு ரோஜா தண்ணீர், இரண்டு ஏலக்காய் போட்டு கொள்ள வேண்டும்.அதன் பின் அதனுள் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளவும்.
சூடு பொறுக்கும் வரை வெளியிலேயே இருக்க வேண்டும்.சூடு ஆறிய பின்னர் ப்ரீட்சில் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.காலை மற்றும் மாலை இரு நேரமும் சிறிதளவு எடுத்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் முற்றிலுமாக இருக்காது.