Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விரைவில் கர்ப்பமடைய திருமணமான தம்பதிகள் உறவின் போது கடைபிடிக்க வேண்டிய டிப்ஸ்

tips for pregnancy in tamil

tips for pregnancy in tamil

விரைவில் கர்ப்பமடைய திருமணமான தம்பதிகள் உறவின் போது கடைபிடிக்க வேண்டிய டிப்ஸ்

தற்போதைய சூழலில் திருமணமான தம்பதிகளுக்கு குழந்தையின்மை பிரச்சனை என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது.குழந்தையின்மை பிரச்சனைக்கு ஆண் அல்லது பெண்ணின் உடலில் ஏதாவது பிரச்சினைகள் உள்ளதாக என்று மருத்துவரின் ஆலோசனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தம்பதிகள் இருவரின் உடலில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும் போது கூட பலருக்கு குழந்தை உருவாவது தள்ளிக் கொண்டே செல்லும்.இதற்கு இக்கால இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கணவன் மனைவி உறவு குறித்து சரியான புரிதல் இல்லாமல் போனதே காரணமாக கூறப்படுகிறது.

அந்த வகையில் புதியதாக திருமணமான தம்பதிகள் உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள உடலுறவின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும்,எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து முன்னோர்கள் கூறிய சில ஆலோசனைகளை பார்ப்போம்.

Tips to Get Pregnant Faster in Tamil

1. பெண்களுக்கு மாதவிடாய் வந்த 8 வது நாளிலிருந்து அடுத்த மாதவிடாய் வரும் நாளுக்கு 8 நாட்கள் முன்னதாக உள்ள அந்த இடைப்பட்ட 8 நாட்கள் கணவன் மனைவி உடலுறவு கொள்வது விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள பலனளிக்கும்.

2. பெரும்பாலும் கணவன் மனைவி இருவரும் அதிகாலை நேரம் இணைவது குழந்தை பெற்றுக் கொள்ள நல்ல பலன் அளிக்கும்.

3. படங்களில் பார்த்து உடலுறவில் வித்தியாசமான பொசிசன்கள் என முயற்சி செய்ய வேண்டாம். பெண் கீழ் ஆண் மேல் என்ற சாதாரண பொசிஷனே குழந்தை பெற்றுக் கொள்ள போதுமானது. மேலும் இந்த நிலையில் பெண்ணின் இடுப்புக்கு கீழே தலையணை வைத்து உயர்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

4. குறிப்பாக உடலுறவு முடிந்த உடனே பெண் எழுந்திருக்கவோ அல்லது உட்காரவோ கூடாது. சிறிது நேரம் அப்படியே மல்லாந்து படுத்த நிலையிலேயே இருக்க வேண்டும்.

5. அடுத்து உடலுறவு முடிந்த பின்பு எக்காரணம் கொண்டும் பெண்ணுறுப்பை தண்ணீர் கொண்டு கழுவி விட வேண்டாம்.

6. இது மட்டுமல்லாமல் உறவு ஆரம்பிக்கும் முன்னதாக கணவன் மனைவி இருவரும் முன்விளையாட்டில் நீண்ட நேரம் ஈடுபட்டாலே உறவு கொள்ள ஏதுவான வகையில் இயற்கையான லூப்ரிகேசன் கிடைக்கும். குறிப்பாக இதற்காக வாசலின், எண்ணெய் மற்றும் கிரீம்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.

7. முக்கியமாக கணவன் மனைவி இருவரும் நல்ல மனநிலையில் உண்மையான காதலுடன் முன் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். இந்த முன் விளையாட்டின் நேரமே கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான இன்பத்தின் நேரத்தை நீட்டிக்கும்.இதுவும் குழந்தை உருவாகுவதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

கணவன் மனைவி இருவருக்கும் உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மேற்சொன்ன வகையில் உறவு கொண்டால் விரைவில் குழந்தை உருவாகும் என்று முன்னோர்களால் கூறப்படுகிறது.

மேலும் தகவலுக்கு : கரு தங்க என்ன செய்ய வேண்டும்,கரு உருவாக என்ன சாப்பிட வேண்டும்,கருமுட்டை வளர என்ன செய்ய வேண்டும்,கரு தங்க மாத்திரை,ஒரே மாதத்தில் கர்ப்பமாக எளிய வழிகள்,கரு உருவாக மந்திரம்,குழந்தை பெற என்ன செய்ய வேண்டும்,ஒரே மாதத்தில் கர்ப்பமாக எளிய வழிகள்,கர்ப்பம் தரிக்க சரியான நாட்கள்,கரு தங்க என்ன செய்ய வேண்டும்,கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம்,எத்தனை முறை செய்தால் குழந்தை பிறக்கும்,கர்ப்பம் தரிக்க மந்திரம்,கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்,எத்தனை முறை செய்தால் குழந்தை பிறக்கும்,எப்படி செய்தால் குழந்தை பிறக்கும் video,கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம்,கர்ப்பம் தரிக்க செய்ய வேண்டியவை,கர்ப்பம் தரிக்க உடற்பயிற்சி,Tips to Get Pregnant Faster

Exit mobile version