வீடு துடைக்க பயன்படுத்தும் MOP-இல் படிந்துள்ள அழுக்குகளை சுலபமாக க்ளீன் செய்ய உதவும் டிப்ஸ்!!

0
83

பண்டிகை காலங்களில் வீட்டை துடைத்து சுத்தம் செய்ய கிளீனிங் மாப் பயன்படுத்தப்படுகிறது.மாப் பயன்படுத்துவதால் வீட்டு தரை பளிச்சென்று மாறுகிறது.ஆனால் வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் மாப்பை நாம் முறையாக க்ளீன் செய்யாமல் விடுவதால் அவற்றில் அழுக்கு மற்றும் எண்ணெய் கறைகள் படிந்து அப்புறப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

எனவே வீட்டை சுத்தம் செய்ய பிறகு மாப்பில் உள்ள அழுக்குகளை முறையாக க்ளீன் செய்ய கீழ்கண்ட டிப்ஸை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வினிகர் – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு மாப்பை போட்டு அரை மணி நேரத்திற்கு ஊறவிட வேண்டும்.

பிறகு மாப்பை பிழிந்துவிட்டு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட வேண்டும்.அதன் பிறகு மீண்டும் பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து கலந்துவிட வேண்டும்.

பிறகு மாப்பை அதில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.பிறகு மாப் ஊறவைத்த நீரை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் அதில் சூடான நீரை ஊற்றி ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்துவிட வேண்டும்.

பிறகு மாப்பை அதில் போட்டு 5 நிமிடங்களுக்கு ஊறவைத்து எடுத்தால் அழுக்கு,எண்ணெய் பசை நீங்கி புதிய மாப் போன்று மாறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)வாஷிங் லிக்விட் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு பக்கெட்

செய்முறை விளக்கம்:-

அகலமான பக்கெட்டில் வெது வெதுப்பான நீரை ஊற்றி ஒரு தேக்கரண்டி வாஷிங் லிக்விட் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பிறகு அதில் மாப்பை போட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.பிறகு மாப்பை பிழிந்துவிட்டு சுத்தமான நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து பிழிந்து நன்றாக காயவிட வேண்டும்.இவ்வாறு செய்தால் மாப்பில் படிந்துள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

அதேபோல் பாத்திரத்தில் சூடான நீர் ஊற்றி ஒரு கைப்பிடி சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மாப்பை அதில் போட்டு 30 நிமிடங்கள் ஊறவிட்டால் கறைகள் நீங்கிவிடும்.