வீட்டில் கொசுத் தொல்லை அதிகமாகிடுச்சா? இந்த ஸ்ப்ரே அடித்து ஒரே நொடியில் விரட்டுங்கள்!!

0
141
Tips to get rid of mosquito infestation

தற்பொழுது கொசுக்களால் பல்வேறு நோய் பாதிப்புகள் வந்த வண்ணம் உள்ளது.தமிழகத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இருக்கும் வீட்டில் கொசு பரவலை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும்.சந்தையில் விற்கும் ஆல் அவுட்,குட் நைட் போன்ற இரசாயனப் பொருட்களை தவிர்த்து இயற்கை முறையில் கொசுக்களை விரட்டுவது நல்லது.

தேவையான பொருட்கள்:

*வேப்ப எண்ணெய்
*வேப்ப இல்லை
*பூண்டு
*கிராம்பு

செய்முறை:

ஒரு மண் அகல் விளக்கில் பாதியளவு வேப்ப எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் இரண்டு வேப்பிலையை கிள்ளி போடவும்.

அதன் பிறகு ஒரு பல் பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி அதில் சேர்க்கவும்.அடுத்து இரண்டு கிராம்பை சேர்த்து ஒரு காட்டன் திரி போட்டு விளக்கை பற்ற வைக்கவும்.விளக்கில் இருந்து வரும் வாசனை தாங்காமல் கொசுக்கள் தெறித்தோடி விடும்.

தேவையான பொருட்கள்:

*எலுமிச்சை சாறு
*கிராம்பு

செய்முறை:

10 கிராம் கிராம்பை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கிராம்பு பொடியை போட்டு 150 மில்லி தண்ணீர் ஊற்றவும்.பிறகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை அதில் பிழிந்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் நடமாட்டம் குறையும்.

தேவையான பொருட்கள்:

*புதினா இலை
*கற்பூரம்
*பூண்டு பல்

செய்முறை:

பத்து புதினா இலை மற்றும் இரண்டு பல் பூண்டை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.பிறகு ஒரு கற்பூரத்தை தூளாக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போடவும்.பிறகு அரைத்த விழுதை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும்.

இதை வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்து விட்டால் கொசுத் தொல்லை ஒழியும்.

தேவையான பொருட்கள்:

*பூண்டு
*நல்லெண்ணெய்

செய்முறை:

அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 10 கிராம் பூண்டு பற்களை இடித்து போட்டு காய்ச்சவும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு பாட்டிலில் சேமித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி தயாரித்த பூண்டு எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்துவிடவும்.இதை வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசுத் தொல்லை ஒழியும்.