Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்!

#image_title

உடல் சோர்வா? சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி நிறைந்த உணவுகள்! 

வைட்டமின் சி நமது உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். இந்த வைட்டமின் எளிதில் நீரில் கரையக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களாகவும் செயல்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடு, சரும பிரச்சனைகள், கண் சார்ந்த நோய்களுக்கு வைட்டமின் சி குறைபாடு காரணமாக அமைகிறது.

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே!

இந்த இரண்டு பழங்களைத் தவிர வைட்டமின் சி சத்து நிறைந்த பிற பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

1. அன்னாசி பழம்:

வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களில் அன்னாச்சியும் ஒன்று. கூடுதலாக இது ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதோடு, எலும்புகளுக்கும் வலிமை அளிக்கிறது.

2. பப்பாளி:

மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பழம். இதை உணவில் சேர்த்துக்கொள்வது அதிக அளவிலான வைட்டமின் சி கிடைக்க உதவியாக இருக்கும்.

3. கொய்யாப்பழம்:

கொய்யாவில் ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட 4 மடங்கு அதிகமான வைட்டமின் சி உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கிடைப்பதோடு, நீரழிவு நோய் தடுப்பு, இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, கண்பார்வை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. கொய்யாவில் மாங்கனீசும் நிறைந்துள்ளது, இது நாம் உண்ணும் உணவில் இருந்து மற்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது.

4. கிவி:

அடர்-பச்சை நிறத்தில் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுள்ள கிவி பழத்தில் நீங்கள் எதிர்பாராத அளவுக்கு வைட்டமின் சி சத்து நிறைத்துள்ளது. கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம் உள்ளது. மேலும் இந்த பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் டயட் இருப்பவர்கள் உணவு பட்டியலில் இடம் பிடிக்கின்றன.

5. குடைமிளகாய்:

சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிற குடைமிளகாயில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. உங்களது கண்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது. உங்கள் உடலில் வைட்டமின் சி ஊட்டச்சத்தின் அளவை அதிகரித்து நுரையீரல் புற்றுநோய் ஏற்படாமல் ஏற்படாமல் தடுத்திட குடைமிளகாய் உதவுகிறது.

Exit mobile version