திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்

0
258

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை(செப்டம்பர்4) தொடங்கப்படவுள்ள நிலையில் இன்று மாலை கொடிப்பட்ட வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா நாளை(செப்டம்பர்4) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது. ஆவணித் திருவிழாவின் கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று(செப்டம்பர்3) மாலை கொடிப்பட்டத்தின் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது.

14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின் முறை 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் இந்த கொடிப்பட்டத்தை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்னர் இந்த கொடிப்பட்டத்தை 1ம் படி செப்பு ஸ்தலத்தார் ஐ.ஆண்டி சுப்பிரமணியன் ஐயர் அவர்கள் யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு திருவீதி உலா வந்து சுப்பிரமணியசுவாமி கோவிலை வந்து அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பணி செய்யும் பணியாளர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன் அவர்களும், அறங்காவலர்கள் அனிதா குமரன், ந.ராமதாஸ், பா.கணேசன், வி.செந்தில் முருகன், இணை இயக்குநர் மு.கார்த்திக் ஆகியோர் திருக்கோவில் பணியாளர்களுடன் சேர்ந்து செய்துள்ளனர்.