Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லட்டு விலையை கணிசமாக குறைத்த தேவஸ்தானம் – புதிய விலை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

கொரோனா ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் ஏழுமலையான் கோவிலின் முக்கிய பிரசாதமான லட்டின் விலையை குறைத்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி “கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ஊரடங்கால் ஏழுமலையான் கோவிலில் மக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு தரிசனம் கிடைக்காத நிலையில் பிரசாதத்தை மக்களுக்கு அளிக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அதனால், ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை 50 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைந்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

விருப்பமுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை வாங்கிச் சென்று பக்தர்களுக்கு அளிக்கலாம் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் லட்டு பிரசாத விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இந்த 50% விலை குறைப்பால் லட்டு விற்பனை அதிகரித்து அதிக அளவிலான பக்தர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.வ்

Exit mobile version