திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது!

0
341
#image_title

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

அதைதொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த புரட்டாசி மாதம் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்ததால் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியது.

அதனால் பக்தர்கள் எந்த நேரத்தில் எந்த நாளில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வாறு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும்பொழுது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடிந்தது. மேலும் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கும் விடுதிகளுக்கு கட்டண உயர்வு உயர்த்தப்பட்டது. கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் டிக்கெட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் இனி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, போன்றவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் பெற முடியாது எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.