Tirupati : இனி திருப்பதியில் இதை பேசினால் கடும் நடவடிக்கை!! தேவசம் போர்டு போட்ட அதிரடி ரூல்ஸ்!!

0
73
Tirupati: Strict action will be taken if this is discussed in Tirupati from now on!! Devasam board posted action rules!!

Tirumala Tirupati Devasthanam: திருப்பதி கோவிலில் இனி அரசியல் குறித்த எந்த பேச்சும் இருக்க கூடாது என புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர் .

திருப்பதி தேவஸ்தானமானது பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக லட்டு கலப்பட விவகாரமானது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. அதிலும் கோவிலின் புனிதத்தை மீட்டெடுக்க யாகம் போன்ற பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டனர். இந்த வழக்கானது தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து லட்டு பெறுவதிலிருந்து செய்முறை வரை எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது  திருப்பதி தேவசத்தானம் போர்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது திருப்பதி என்பது முழுமையான ஆன்மீகத்தால் சூழ்ந்துள்ள பகுதி, இதில் தேவையற்ற அரசியல் பேசி அதனை கலங்க படத்தக்கூடாது என கூறியுயுள்ளனர். திருப்பதிக்கு வருபவர்கள் தங்களது எண்ணத்தை முழுமையாக வெங்கடாஜலபதி மீது செலுத்தி அதனை வெளிக்கொண்டு செல்லும் போதும் அதே எண்ணத்தை பின்பற்ற வேண்டும். ஆனால் வெளியே சென்று அரசியல் பற்றி பேசி இந்த திருப்பதி தேவஸ்தானத்தை களங்கப்படுத்துக்கின்றனர்.

அதனால் வெளியே அளிக்கும் இவ்வாறான பே ட்டிகளில் மிகுந்த கவனம் தேவை. கட்டாயம் இதே போலான பேட்டிகளை இனி அளிக்க கூடாது. மீறி இவ்வாறான அரசியல் பேட்டிகளை கோவிலுக்கு வெளியே கொடுப்பவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். லட்டு சர்ச்சை விவகாரத்திற்கு பிறகு மீண்டும் இவ்வாறான நடவடிக்கையானது அரசியல்வாதிகளை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது .