இந்த மாவட்டத்தில் வரும் 4ம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்! யாரும் மிஸ் பண்ணாதீங்க!

0
166

திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 4ம் தேதி 35 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது அதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் 1,341 இடங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் வினித் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுவரையில் மற்றும் 15 முதல் 18 வயது வரையிலுள்ள இளம் சிறுவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் எல்லோருக்கும் 35 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் செப்டம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது எனக் கூறியிருக்கிறார்.

மேலும் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 98.92% பேர் முதல் தவணை தடுப்பூசியும் 79.06சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசியையும், 15 வயது முதல் 18 வயது வரையில் இருக்கிற பிரிவில் 88.64% பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 75. 18 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசியையும் 12 வயது முதல் 14 வயது வரையில் இருக்கின்ற பிரிவில் 90.44 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், செலுத்திக் கொண்டுள்ளார்கள். மேலும் 66.84 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசியையும், செலுத்திக் கொண்டுள்ளார்கள்.

இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டு 6 மாதம் அல்லது 26 வாரம் கடந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் எல்லோருக்கும் இலவசமாக போஸ்டர் தடுப்பூசி இந்த முகாமில் செலுத்தப்படுகிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையில் மட்டுமே இலவசமாக எல்லோருக்கும் செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்.