Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெத்த மகனின் கொடுமை தாங்க முடியவில்லை! எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; கண்ணீருடன் புகார்!!

பெத்த மகனின் கொடுமை தாங்க முடியவில்லை! எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்; கண்ணீருடன் புகார்!!

மகனின் கொடுமையை தாங்க முடியாமல், எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று வயதான பெற்றோர் கலெக்டரிடம் மனுகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் ராயர்பாளையத்தைச் சேர்ந்த சென்னியப்பன் மற்றும் அவரது மனைவி கருணையம்மாள் என்ற வயதான தம்பதியருக்கு, பழனிச்சாமி என்கிற மகனும், கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்படுவதாவது; எங்களுடைய மகன் பழனிச்சாமி சொத்துக்களை அபகரித்துக் கொண்டு கடந்த 10 வருடங்களாக தங்களை கொடுமை செய்து வருகின்றனர். ஏற்கனவே மகனும்,மருமகளும் எங்களை அடித்து துன்புறுத்தியதால் பல்லடம் காவல் நிலையத்தில் கொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்தும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

எங்களுக்கு வரவேண்டிய மின்சார இணைப்பை துண்டித்துள்ளார், குடிநீரை பிடிக்க விடாமல் பிரச்சினை செய்கிறார். தினமும் நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறோம். எங்களுக்கான நீதியை வாங்கிக் கொடுங்கள் இல்லையேல் எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. பெற்ற மகன் இவ்வளவு கல் நெஞ்சமாக இருப்பது பலரிடையே பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version