Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்!

Tirupur: The romantic couple in the car! Three police showing the hand line!

Tirupur: The romantic couple in the car! Three police showing the hand line!

காத்துவாக்குல மூன்று போலீஸ்! காரில் காதல் ஜோடிக்கு நடந்தது என்ன? எஸ்.பி கொடுத்த அதிரடி சஸ்பென்ட்!

மக்களிடம் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பணத்தை பெறுவது சட்டத்திற்கு எதிரானது. பலரும் இந்த தவறை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அடுத்த பெருமாநல்லூர் என்ற பகுதியில் காதல் ஜோடிகள் இருவர் சாலையோரமாக காரை நிறுத்திவிட்டு பேசி வந்துள்ளனர். அப்போது அதன் வழியே சென்ற காவல்துறை அதிகாரி கதிரவன்,தமிழ் மற்றும் தனபால் என்பவர் இவர்களை விசாரித்துள்ளனர். விசாரணை செய்ததோடு அவர்களிடம் காருக்கு உண்டான ஆவணங்களை கேட்டுள்ளனர். இவர்களும் சரியான ஆவணத்தை கொடுத்துள்ளனர்.

இவர்கள் சரியான ஆவணங்களை கொடுத்த போதிலும் அவர்களை மிரட்டி அந்த மூன்று காவல் அதிகாரியும் ரூ. 35 ஆயிரத்தை தரும்படி மிரட்டி உள்ளனர். பணத்தை தர மறுத்தால் உங்கள் மீது பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டுயுள்ளனர்.இவர்களும் அந்த போலீசார் கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர்.இந்த பணத்தை அவர்களை விசாரணை செய்த மூன்று போலீசாரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நாங்கள் சரியான ஆவணத்தை அளித்த போதும் எங்கள் மீது எந்த தவறும் இல்லாத போதும் ஏன் இவர்கள் எங்களிடமிருந்து பணத்தை பெற்றார்கள் என இந்த ஜோடிகள் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். புகார் அளித்ததன் பெயரில் அந்த மூன்று காவல்துறையையும் அழைத்து விசாரணை செய்தனர். அவ்வாறு விசாரணை செய்ததில் போலீசார் மூவரும் பணத்தை  பெற்றது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும் அந்த மூன்று காவல் துறை அதிகாரிகளளையும் பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களால் போலீஸின் மேல் மக்களுக்குண்டான மரியாதை அடிமட்டம் ஆகிறது.

Exit mobile version