Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு சுகாதார அலுவலகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் உடனே முந்துங்கள்!

திருவண்ணாமலை இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்

1. கணக்கு உதவியாளர் – 1

கல்வி தகுதி: Tally படிப்புடன் B.com முடித்திருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ.16,000 /-

பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர்

கல்வி தகுதி: பிசியோதெரபி படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ.13,000 /-

நகர்புற சுகாதார மேலாளர் / சுகாதார செவிலியர்

கல்விதகுதி: செவிலியர் படிப்பில் பிஎஸ்சி/எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்: ரூ.25,000

நிபந்தனைகள்

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

கௌரவ செயலாளர்/ துணை இயக்குனர்/ சுகாதாரப் பணிகள்/ மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம் செங்கம், சாலை திருவண்ணாமலை.

வேலையை சொல்லப்பட்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு 2-12-2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன.

அதற்கு மேல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதோடு 5-12-2022 அன்று நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version