Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்!

Title of Jyothika's next film! The post is going viral on the internet!

Title of Jyothika's next film! The post is going viral on the internet!

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்!

நடிகை ஜோதிகா முதன் முதலில்  வாலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.அதன் பிறகு செப்டம்பர் 11 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்.ஜோதிகா சூர்யாவுடன் திருமணத்திற்கு பிறகு சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் இவர்  நடிப்பு மட்டுமின்றி அவருடைய 2டி நிறுவனம் மூலம் சிறந்த திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.

மேலும் சோலோ ஹீரோயினாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடித்து வரும் பொன்மகள் வந்தால், ராட்சசி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜோதிகா  பல வருடங்கள் கழித்து மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் திரைப்படத்தில்   71 வயது நடிகரான மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என முன்னதாகவே தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்புடன்  அழகிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. மம்மூட்டியும் மற்றும்  ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு காதல் தே கோர் என தலைப்பை வைத்துள்ளனர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version