கொளத்தூரில் நவீன விற்பனை மையம் அமைப்பு! வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு!

0
105

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது வழக்கமான நிகழ்வுதான் அதனடிப்படையில் ஆண்டுதோறும் பொது நிதிநிலை அறிக்கை மாநில அரசால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் ஆண்டுதோறும் பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதேபோல அப்படி தாக்கல் செய்யப்படும் போது சென்ற வருடத்திற்கான வரவு செலவு கணக்குகளை அத்துடன் எதிர்வரும் வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவிப்பார்கள்.அதன்படி தமிழ்நாட்டில் 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்திற்கான பொது பட்ஜெட் நேற்று காலை 10 மணி அளவில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இந்த சூழ்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன் சேர்த்து விவசாயத்துக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தது. அந்த கட்சியின் இந்த நியாயமான கோரிக்கையை இதுவரையில் எந்த அரசும் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. அப்படியிருக்க தற்சமயம் பாட்டாளி மக்கள் கட்சியின் 15 ஆண்டு கனவு இன்று நனவாகி இருக்கிறது.

தமிழகத்தில் இன்று முதல் முறையாக வேளாண்மை துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.. 273 பக்கங்கள் கொண்ட விவசாயத்திற்கான தனி நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கின்றார்.இதில் மிக முக்கியமாக சென்னை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சார்ந்த இடங்களுக்கு நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அத்துடன் காய்கறி அங்காடிகள் வாங்குவதற்கு கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கும் 40% மானியம் கொடுக்கப்படும் என்றும், விளை பொருள்களுக்கு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்காகவும், சென்னை கொளத்தூரில் நவீன விற்பனை மையம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சுமார் 7 மாவட்டங்களை கொண்ட பகுதிகள் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு முருங்கைக்காய் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை அதிகப்படுத்த முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.