Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக்கிய கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை! உறுதி செய்யப்படும் தொகுதி பங்கீடு!

அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை நெருங்கி விட்டதாக தெரிவிக்கிறார்கள்.

அண்மையில் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சுமார் மூன்று மணி நேரமாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் இதில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 40 தொகுதிகள் கேட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 அல்லது 22 தொகுதிகள் வரையில்தான் கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இணையவேண்டும் என்று அமித்ஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கின்றது.

இருந்தாலும் எங்கள் கூட்டணியில், அல்லது எங்கள் கட்சியுடனும் சசிகலா இணைவதற்கு வாய்ப்பே இல்லை என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், அதிமுக மற்றும் பாஜகவின் தொகுதி பங்கீடு இன்றைய தினம் உறுதி செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழக நிர்வாகிகளுடன் பாரதிய ஜனதா கட்சி இன்று தன்னுடைய ஆலோசனையை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை தியாகராயநகரில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டமானது நடைபெற இருப்பதாக தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் கிஷன் ரெட்டி, விகே சிங் சி டி ரவி , சுதாகர் ரெட்டி, போன்றோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதிமுகவுடன் இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version