Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்லூரி மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியான முக்கிய அறிவிப்பு!

அதனைத் தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். அவ்வாறு வாசித்து வரும் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாககிவருகிறது.

அதில் வெளியிட்டிருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு தொடர்பாக உரையாற்றிய நிதி அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக உரையாற்றத் தொடங்கினார். அப்போது பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 2 வருடங்கள் நோய் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றலிழப்பை ஈடு செய்யும் விதத்தில் இல்லம் தேடி கல்வி என்ற மிகச்சிறப்பான கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 18 லட்சம் தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் எதிர்வரும் நிதி ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் இதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுப்பதற்காக கல்லூரியில் சேர்ந்து படிப்பு முடியும் வரை மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அடுத்த 5 வருடங்களில் அனைத்து அரசுப் பள்ளிகளை நவீன மாற்றுவதற்கான பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் இந்த திட்டத்தில் அரசு பள்ளிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version