Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக பட்ஜெட் காவிரி நீர் கடைமடை வடிகால் வாரியத்தை புரனமைக்க 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

இந்த வருடத்திற்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது இதற்காக தமிழக சட்டசபை இன்று காலை 10 மணியளவில் கூடியது.தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்களின் பேச்சுக்கள் அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை வாசிக்க தொடங்கினார்.

அந்த நிதிநிலை அறிக்கையில் குறுவை சாகுபடிக்காக டெல்டாவை சார்ந்த 10 மாவட்டங்களில் 4694 கிலோமீட்டர் கால்வாய்களை தூர்வார்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.
அதோடு வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக 2787 கோடியும், பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல்கட்டமாக 7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

பாசனத்திற்கான நீரை எந்தவிதமான தடையுமின்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை அமைக்கவும், 3,384 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா கடைமடை பகுதிகளில் வரையில் தூர்வாரும் பணிகளுக்கு 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version