தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தற்போது வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் நேற்று முதல் தொடங்கியது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரி, குளங்கள், கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகின்றன. அத்துடன் சென்னையில் மழை நீர் கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்பட்டு, அதற்கென தனித் தனியாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, வருவாய் துறை முதன்மை செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.