Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு முதல்வரிடம் இருந்து வந்த கோரிக்கை!

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்திருக்கின்றன ஒரு செய்தி குறிப்பில் என்னை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து மற்றும் பொன்னாடைகள் எடுத்து வருவதை தவிர்த்திடுங்கள். மாறாக பூங்கொத்து மற்றும் வகைகளுக்கு பதிலாக புத்தகங்களை கொடுங்கள் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதோடு நோய்த்தொற்று பரவால்ல அதிகரித்து வரக்கூடிய இந்த காலகட்டத்தில் வரவேற்பு பேனர்கள் வைப்பதை உடன் பிறப்புகள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல வரவேற்பு வளைவுகள் மற்றும் சுவரொட்டிகள் வைப்பவர்களை அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் போன்றோர் நிச்சயம் கண்டிக்க வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது.

Exit mobile version