Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலமைச்சர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அவர்தானாம்! முதலமைச்சர் ஸ்டாலின்!

பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை காலை திருச்சிக்கு வருகை தந்தார்.

இதன் ஒரு கட்டமாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 363 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த பணிகள் ஆரம்பம், புதிய பணிகளுக்கு அடிக்கல், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் வாகனங்களால் உண்டாகும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக, தனி சிமெண்ட் சாலை ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை வருடங்களில் செயல்படுத்தப்படும் தொழில் திட்டங்கள் காரணமாக, தேசிய அளவில் தொழில் துறையில் முதல் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் அவருக்கு கூறினார்.

ஒரு முதல்வர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்த 10 வருட காலமாக இருந்த அதிமுக ஆட்சி என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

தமிழக அரசின் மீது புகார் வழங்க ஒரு தகுதி இருக்கிறது எனவும் முதலமைச்சர் எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கண்டனத்தை பதிவு செய்தார். தமிழகத்தை மீண்டும் உயர்த்துவது தான் எங்களுடைய முதன்மை குறிக்கோள் என்று குறிப்பிட்டிருக்கின்ற அவர், உழைப்பால் அது போன்ற உயர்வை நாங்கள் நிச்சயம் அடைவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

இந்த விழாவில் அமைச்சர்கள் சிவசங்கர், ரகுபதி, எம் ஆர் கே பன்னீர்செல்வம், கே என் நேரு, கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், ராசா உள்ளிட்ட பலர் பங்கேற்றுக் கொண்டனர்.

Exit mobile version