Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி உத்தரவு! நடுக்கத்தில் வேட்பாளர்கள்!

நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் மரபு. அதன்படி ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 6 முதல் 10 ஆண்டுவரை தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் ஆகவே தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்யும் சமயத்தில் அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தில் இருந்து வரும் நடைமுறை3 ஆகவே இந்த நடைமுறைப்படி தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய குற்றப்பின்னணி தொடர்பான விபரங்களை வரும் 26 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

அந்த உத்தரவின்படி குற்ற சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்ட வேட்பாளர்கள் வாக்கு பதிவுக்கு முன்னதாகவே 3 முறை அது தொடர்பான விவரங்களை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது. அதன்படி முதல் கட்டமாக இன்று முதல் 26ம் தேதிக்குள், இரண்டாவது கட்டமாக 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் ஆகவும், மூன்றாம் கட்டமாக 31ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரையிலும் என மூன்று கட்டமாக குற்றப் பின்னணி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேட்பாளர்கள் உடைய குற்றப்பின்னணி தொடர்பான விவரங்களை c1 எனும் படிவத்தில் பூர்த்தி செய்து அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகள், நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கு குறைந்தபட்சமாக விதிக்கப்பட்ட தண்டனை போன்ற விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும். இந்த படிவத்தை பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்பதே இந்த உத்தரவின் சாராம்சம். பத்திரிக்கையில் வெளியிட்டு அது குறித்த விவரங்கள் தொடர்பாக தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Exit mobile version