TNEB Bill: தமிழகத்தில் இனி மின்சார கட்டணத்தை whatsapp மூலம் செலுத்திக் கொள்ளலாம் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக மக்கள் மின் கட்டணத்தை கட்டுவதற்கான சிரமத்தை குறைத்து தமிழக மின்சார வாரியம் இவ்வாறான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மின் கட்டணம் செலுத்துவது சுலபமாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்களால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனையவர்கள் இதனை பயன்படுத்த முடியாது.
வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்துவதற்கு மின்சார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணாக இருப்பது கட்டாயம்.
மின்சார வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்துவதற்கு (TANGEDCO) 94987 94987 என்ற மின்சார வாரிய மொபைல் எண்ணை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு உங்கள் மின் கட்டணத்திற்கான செய்தி வாட்ஸ் அப்பில் தெரிவிக்கப்படும். அதன் பிறகு நீங்கள் உங்கள் மொபைலில் வைத்திருக்கும் யுபிஐ செயலின் மூலம் ஈசியாக மின்கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
அதாவது நீங்கள் உங்கள் மொபைலில் யுபிஐ செயலியான google pay வைத்திருக்கிறீர்கள் என்றால் அதில் பே-பில்ஸ் (Pay bills) என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை ஓபன் செய்தால் EB bill என்ற ஆப்ஷன் இருக்கும். அந்த EB bill- ல் EB எண் சரியாக பதிவு செய்தால் நீங்கள் மின்கட்டணத்தை எளிமையாக செலுத்தி விடலாம். மாதம் தோறும் உங்களுக்கு கூகுள் பே மூலம் மின் கட்டணம் குறித்த அறிவிப்பு வந்து கொண்டிருக்கும்.
மேலும் படிக்க: கதிகலங்க வைக்குமா புதிய கொரோனா? 100 பேரை தாக்கிய ஃபிலிர்ட்!