விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி., 5 லட்சம் பரிசு!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

0
130

5 லட்சம் பரிசு.,தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு:

நெல் சாகுபடி மூலமாக அதிக மகசூல் கிடைக்கும் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் இதனை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘செம்மை நெல் சாகுபடியை ஊக்குவிக்க அரசு பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும், அந்த வகையில் மாநில அளவில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பரிசாக 5 லட்சம் ரூபாயும், 7000 ரூபாய் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த பரிசுத் தொகையைப் பெறுவதற்கு செம்மை நெல் சாகுபடி செய்து கூடுதல் மகசூலைப் பெற வேண்டும். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நெல் நடவு செய்து, 15 நாட்கள் கழித்து 150 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி வேளாண் விரிவாக்க மையத்தில் ஒரு ரசீதை பெற வேண்டும்.

மேலும், அது மட்டுமல்லாமல் விவசாயின் பெயர், நெல் ரகம், பயிரிடும் பருப்பு, உத்தேச அறுவடை, முகவரி மற்றும் தேதியுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் வரை அணுக வேண்டும். இதன் பின் இந்த திட்டத்திற்காக பதிவு செய்த விவசாயி வயலில் அறுவடை சமயத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மாவட்ட தலைமை அதிகாரி மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் ஆகியோர் ஆய்வு மேற்கொள்வார்கள்.

கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.