மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றுகையில்,
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குடும்ப அட்டைதாரரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியை மேற்கொண்டனர். மேலும், ரேஷன் கடையின் விடுமுறை நாட்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் பணியாற்றி உள்ளனர்.
எனவே, விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் வேலை நாட்களாக செயல்பட்டதற்கு பதிலாக இந்த மாதம் 19-ந்தேதி, வரும் அக்டோபர் 17-ந்தேதி, நவம்பர் 21-ந்தேதி ஆகிய நாட்களில் அதாவது, மாதத்தின் மூன்றாவது வார சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.