Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Breaking: இனி இவர்களுக்கு ரூ 8000 வரை சம்பள உயர்வு:!! அரசு அதிரடி உத்தரவு!!

Breaking: இனி இவர்களுக்கு ரூ 8000 வரை சம்பள உயர்வு:!! அரசு அதிரடி உத்தரவு!!

போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முன்னிலையில் நேற்று காலை 11 மணி அளவில்,போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் சிடிஐயூ உள்ளிட்ட 67 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இரண்டாவது நாளாக தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.அதாவது போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ஏற்று
கையொப்பமிட்டுள்ளது.

அதாவது ஓட்டுனர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.2,012-லிருந்து அதிகபட்சமாக 7,981 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்றும்,நடத்துனர்களுக்கு குறைந்தபட்சம் 1,965-லிருந்து 6,640 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version