Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரியலூர் மாவட்டத்தில் காலியாகவுள்ள தூய்மை பணியாளர் பணியிடங்கள்!

அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாகயிருக்கின்ற 10 பகுதி நேர தூய்மை பணியாளர் ஆண், பெண், 3000 ரூபாய் என்ற தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேற்படி காலியிடங்கள் நேர்காணல் மூலமாக இன சுழற்சியினடிப்படையில், நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் தமிழில் எழுத, படிக்க, தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு ஜூலை மாதம் 1ம் தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும், மற்ற பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்கு மிகாமலிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளுடன் அரியலூர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளராக பணியாற்ற விருப்பம் கொண்டவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மாதிரி விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ஒட்டி அதனை அரியலூர் மாவட்ட ஆட்சியராக வளாகம் முகவரியில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15-9-2022

விண்ணப்ப தொடக்கத்தேதி :2-9-2022

காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து அழைப்பானை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் அவற்றின் மீது அரசு பரிசீலனை செய்யாது என்றும், மனுதாரர் முழு பொறுப்பு எனவும், தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version