ரேஷன் கடைகளில் இனி இந்த பிரச்சனை இருக்காது… அமைச்சர் அதிரடி உத்தரவு…

0
341
#image_title

தமிழகத்தை பொருத்தவரையில் அதிக அளவிலான மக்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே மாத தொடக்கம் முதலே ரேஷன் கடைகளில் கூட்டமாக தான் இருக்கும். கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரம் வரை ரேஷன் கடைகளில் வரிசை நிற்கும். அப்படி நீண்ட வரிசையில் நின்றும் ஒரே நேரத்தில் அனைத்துப் பொருட்களையும் வாங்க முடியவில்லை என்ற பொதுமக்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் அர. சக்கரபாணி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாகவும் பருப்பு, சர்க்கரை, ஆயில் உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அதிக அளவிலான மக்கள் இன்றளவும் பயனடைந்து வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் இந்த பொது விநியோக அமைப்பு பல்வேறு நிறுவனங்களின் கீழ் செயல்படும் 33,222 நியாய விலைக் கடைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகள் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், அதன் பிறகு 2 மணிமுதல் 6 மணி வரையும் செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால் இந்த நேரங்களில் தினந்தோறும் ரேஷன் கடைகள் இயங்குவது இல்லை என்றும், அப்படியே இயங்கினாலும் அனைத்துப் பொருட்களும் ஒரே நாளில் கிடைப்பது இல்லை என்றும் பல கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இக்கூட்டத்தில் பல முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அவர் இனி மக்கள் ஒரே முறை நியாய விலை கடைகளுக்கு சென்று அனைத்து பொருட்களையும் வாங்கிவரும் அளவுக்கு அதிக அளவிலான பொருட்கள் நியாய விலை கடைகளை வந்தடைவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எனவே மக்கள் இனி ஒரு முறை நியாய விலை கடைகளுக்கு செல்வதன் மூலம் சிரமம் இன்றி அனைத்து பொருட்களையும் வாங்கி வரலாம்.