தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பதற்றமான தமிழக மக்கள்!

0
127

நாட்டின் கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள். அந்த நோயிலிருந்து மீண்டு வந்த நோயாளிகள் கருப்பு பூஞ்சை என்ற நோயினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மகாராஷ்டிரா, பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த கருப்பு பூஞ்சை நோயின் காரணமாக, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்த கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தமிழகத்தில் ஆரம்பிக்க தொடங்கியிருக்கிறது. இதுதொடர்பாக நேற்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

கருப்பு பூஞ்சை நோய் தோற்று என்பது இதற்கு முன்னரே இருப்பதுதான், புதிய நோய் இல்லை கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அது குணப்படுத்த கூடிய நோய் தான் பொதுமக்கள் எந்தவிதமான பதட்டமும் அடைய தேவையில்லை. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றை தொற்றுநோயாக அறிவித்து தமிழக அரசு சார்பாக அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னரே குஜராத், தெலுங்கானா, ராஜஸ்தான், ஒரிசா, போன்ற மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.