தமிழகத்தில் கோயம்புத்தூர் உட்பட 1,018 இடங்களின் பெயரை மாற்றிய தமிழக அரசு

0
106
Exif_JPEG_420

இந்திய சுதந்திரமடைவதற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தமிழக இடங்களின் பெயர்களை உச்சரிக்க கடினமாக இருந்த காரணத்தால் அதனை மாற்றியமைத்தனர். உதராணத்திற்க்கு திருவல்லிக்கேணி எனும் இடத்தை Triplicane என ஆங்கிலத்தில் உச்சரித்து வந்தனர்.

ஆனால் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இடங்களின் ஆங்கில பெயர்கள் அப்படியே தொடர்ந்தன.

இந்நிலையில் 2018-2019 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃப்பாண்டியராஜன், “தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்றும் அதனை செயல்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் பரிந்துரையின் அடிப்படையில், முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள 1,018 இடங்களின் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போன்றே ஆங்கிலத்திலும் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் படி பெயர் மாற்றப்பட்ட சில இடங்களின் விவரம்:

திருவல்லிக்கேணி – Triplicane – Thiruvallikkeni
தண்டையார்பேட்டை – Tondiyarpet – Thandaiyaarpettai
வ.உ.சி நகர் – V.O.C Nagar – VA.OO.SI Nagar
எழும்பூர் – Egmore – Ezhumboor
சிவகங்கை – Sivaganga – Sivagangai
தருமபுரி – Dharmapuri – Tharumapuri
பூவிருந்தவல்லி – Poonamallee – Poovirunthavalli
தாராபுரம் வடக்கு – Dharapuram North – Tharaapuram Vadakku
தூத்துக்குடி – Tuticorin – Thooththukkudi
திருவைகுண்டம் – Srivaikundam – Thiruvaikundam
செங்கல்பட்டு – Chengalpet – Chengalpattu
கோயம்புத்தூர் – Coimbatore – Koyampuththoor
ஆரணி – Arni – Aarani
சீர்காழி – Sirkali – Seerkaazhi
திருவில்லிபுத்தூர் – Srivilliputtur – Thiruvillipuththur
கரூர் – Karur – Karoor
விழுப்புரம் – Vilupuram – Vizhuppuram
திருவரங்கம் – Srirangam – Thiruvarangam
நாகர்கோயில் – Nagercoil – Nagerkovil
வேலூர் – Vellore – Veeloor
திண்டுக்கல் – Dindigal – Thindukkal