Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோவில்கள் திறப்பு – அறநிலை துறை விளக்கம்

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

தற்போது 4வது ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில் விரைவில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிப்பதற்கான தளர்வை மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஜூன் 1 முதல் அறநிலை துறை கட்டுப்பாட்டிலுள்ள 40,000 கோயில்களில், சில பெரிய கோயில்களில் மட்டும் நிபந்தனைகளுடன் பக்தர்களை வழிபாட அனுமதியளிக்க அரசு முடிவு செய்திருப்பதாகத் நேற்று தகலவல் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள இந்து சமய அறநிலை துறையினர் “தற்போது வரை, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டை அனுமதிப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. அறநிலையத்துறை சார்பிலும் அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version