இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது.
தமிழகத்தை பொருத்த வரை மொத்தம் 33229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளனர். இது வரை 17527 பேர் குணமடைந்துள்ள நிலையில் 286 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 1562 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1149 பேர் ஆவார்கள்.
இந்நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்ப்ட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊரடங்கு போலவே இல்லை. குறிப்பாக சென்னையில் அரசின் கொரோனா கட்டுபாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வரும் வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கொரோனா மேலும் தீவிரமடைவதை தடுக்கும் பொருட்டு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு வார காலத்திற்க்கு மீண்டும் முழு ஊரடங்கை பிறப்பிக்க அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு இது குறித்து பரீசிலித்து வருவதாகவும் விரைவில் இது குறித்த முடிவெடுக்கும் எனவும் கூறப்படுகிறது.