Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பத்து வருடங்களில் இவ்வளவு வளர்ச்சியா! தமிழக அரசு அளித்த விளக்கத்தால் தலைகுனிந்த எதிர்க்கட்சி!

தமிழ்நாட்டில் சென்ற பத்து வருடங்களில் பெற்ற தொழில் முதலீடுகள் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா, மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆட்சியில் இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்திருக்கின்றது. இதைத்தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிங்கப்பூர், அமெரிக்கா ,போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தார். இதன் மூலமாக ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகள் எவ்வளவு? உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை என்ன? என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். என்று திமுக போன்ற எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் பெங்களூர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்ற 10 வருடங்களில் அறிவிக்கப்பட்ட முதல் ஈடான ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடியில், பெற்றது வெறும் 1.4 சதவீதம் மட்டுமே என்று குறிப்பிடுகிறது. அதாவது 18 ஆயிரத்து 178 கோடி தான் முதலீடாக பெறப்பட்டு இருக்கின்றது. என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது முற்றிலுமாக உண்மைக்கு மாறான செய்தி என்று குறிப்பிட்டிருக்கிற தமிழக அரசு உண்மையிலேயே சென்ற 10 வருடங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட விகிதம் என்பது 82.4 சதவீதமாக இருந்தது .சென்ற 10 வருடங்களில் 26 ஆயிரத்து 309 புதிய தொழில் தம்முடைய திட்டங்கள் புதிய உற்பத்தி தொடங்குவதற்கான இசைவு ஆணையை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்று இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றது.

தேசிய சராசரியை விடவும், அதிகமான வளர்ச்சியை தொடர்ச்சியாக பெற்று இந்தியாவில் தொழில் துறையின் முன்னணி மாநிலமாக தமிழகம் தொடர்ந்து வருவதாகவும், தெரிவித்து இருக்கின்ற தமிழக அரசு, 2015ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் பொழுது போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 72% திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன என்றும், தெரிவித்திருக்கிறது. 2019 ஆம் வருடம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் பொழுது செய்யப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 89 சதவீத திட்டங்கள் பல நிலைகளில் செயல்பாட்டில் இருக்கின்றன எனவும், தெரிவித்து இருக்கின்றது என சுட்டிக் காட்டியிருக்கிறது.

2011 ஆம் வருடத்திலிருந்து, 2019ஆம் வருடம் வரையில் 5 லட்சத்து 97 ஆயிரத்து 753 கோடி ரூபாய் முதலீட்டுக்கான உத்தரவாதம் அளித்து இருக்கின்ற 500 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. திட்டங்களில் 412 தொழில் திட்டங்கள் முழுமையாக முடித்து வைக்கப்பட்டு வணிக உற்பத்தியை ஆரம்பித்திருக்கின்றன. அதாவது பல நிலைகளில் செயல்பாட்டில் இருக்கின்றது. இப்படி 82.4 சதவீதம் என்ற சிறப்பான அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் செயல்பாட்டுக்கான விகிதம் அமைந்து இருக்கின்றது. எனவும் தரவுகள் அனைத்தும் முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் அகில இந்திய அளவில் ஒரு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருவதை உறுதி செய்திருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

Exit mobile version