தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் எழுத்து மூலமாக புகார் தெரிவிக்க புகார் பதிவேடு முறையை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில். ”மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி 8.7.2021 திருவள்ளூரில் நடத்திய ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட சட்ட உறுப்பினர்கள் நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களை இணையம் மூலமாக தெரிவிக்க மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், நியாயவிலை கடைகளில் எழுத்துமூலம் தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு கடையிலும் புகார் பதிவேடு வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் உடனடியாக புகார் தெரிவிக்கவும், தொடர்புடைய அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என கூறியுள்ளனர். மேலும் ஒவ்வொரு நியாயவிலை கடைகளிலும் புகார் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இணையம் மூலமாக புகாரை தெரிவிக்க மக்களுக்கு பல சிரமங்கள் உள்ள காரணத்தினால் ஆய்வுக்கூடத்தில் எம்எல்ஏக்கள் கூறியதால் புகார் பதிவேடு முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளனர். இணையம் மூலமான புகார் நடைமுறை அமலில் இருக்கும் மற்றும் புகார் பதிவேடு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. புகார் பதிவேடு முறையை உடனடியாக அமல்படுத்துவதற்கு நுகர்பொருள் வழங்கல் துறை ஆணையர் உத்தரவு அளித்துள்ளார்.